பதிவு செய்த நாள்
21
ஆக
2014
01:08
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி விழா, கடந்த ஆக.,1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 26 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் சக்கிகரகம், தருமர்பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதிதர்மர் திருக்கல்யாணம், சக்ரா பர்ணகோட்டை, சுபத்திரைஅர்சுணன் திருக்கல்யானம், அபிமன்யு பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பஞ்சபாண்டவர்களின் கதைகளை விளக்கும் வகையில் பீமன் பேராண்டிகள் ஊர்வலம் தினமும் நடந்து வருகிறது. நேற்று உடல் முழுவதும் வர்ணங்கள் பூசியும், இடுப்பில் வேப்பிலை கட்டியும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து ஊர்வலமாக வந்து, நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழாவில் பிச்சனார் கோட்டை, பெத்தார் தேவன் கோட்டை, கீழக்கோட்டை,சிலுகவயல்,செங்கமடை, ஆவரேந்தல், செட்டிமடை, கொத்திடல் களக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய கிராமங்களின் மண்டகபடி நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குழி விழா நாளை நடக்கிறது.