Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி முதல் வெள்ளி கோவில்களில் ... அவிநாசி ஐயப்பன் கோவில் திருப்பணி தீவிரம்! அவிநாசி ஐயப்பன் கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் செப்., 7ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2014
12:08

தேனி: தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் செப்., 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள இக்கோயிலில் கன்னிமூலையில் அமைந்துள்ள கணபதி சுயம்புவாக தோன்றியவர். சுயம்பு கணபதியை பெத்தாட்ஷி அம்மாள் பூஜை செய்து வழிபட்டதால், அவரது பெயராலேயே பெத்தாட்ஷி விநாயகர் என அழைக்கப்படுகிறார். கன்னிமூல கணபதி அருகே நாகர் அமைந்துள்ளார். எனவே வைதீக முறைப்படி இவருக்குதான் முதல் பூஜை நடைபெறும். அடுத்து தான் மூலவருக்கு நடைபெறும். மூலவர் வலம்புரி விநாயகராகவும், தும்பிக்கையில் பிரம்ம கலசமும் வைத்துள்ளார். தலவிருட்சமாக வன்னிமரமும், வில்வமரமும் அமைந்துள்ளன. விநாயகருக்கு வலதுபுறம் துர்க்கை, சரஸ்வதி, இடதுபுறம் சிவன் பார்வதிக்கு நடுவில் முருகன் அமர்ந்திருக்கும் வகையில் சோமசுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் அஞ்சனாதேவியுடன் ஆஞ்சநேயர், கால பைரவர், நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளது. விநாயகர் கோஷ்டத்தில் மகாலட்சுமி, முருகன், நர்த்தனவிநாயகர், சோமாஸ்கந்தர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா சன்னதிகள் உள்ளன. கோயில் சாஸ்திரப்படி மிகவும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி காலை 7.35 மணியில் இருந்து 8.15 மணிக்குள் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு கோயில் அர்ச்சகர் ராமச்சந்திரனை 99948 77505, 98945 04141 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar