தர்மம் தலை காக்கும் என்பார்கள். ஆனால், விநாயகரின் தந்தம் தர்மத்தைக் காத்து நிற்கிறது. தன் அழகிய தந்தத்தை உடைத்து அதை எழுத்தாணியாக்கி வியாசர் இயற்றிய மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். உலகில் தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக,கடவுள் நிலையில் இருந்து இறங்கி,ஒரு குமாஸ்தாவைப் போல, வேதவியாசருக்உதவியாளராக இருந்துஎழுதிய விதம் அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.