முருகப்பெருமானின் நான்காம் படைவீடானசுவாமிமலை அடிவாரத்தில் ககொடுத்த விநாயகர் வீற்று இருக்கிறார். இவரை வழிபட கண்தொடர்பான நோய்கள் நீங்குவதோடு, வயதான காலத்திலும் பார்வைக்குறைபாடு உண்டாகாது என பக்தர்கள் நம்புகின்றனர். கோவை பேரூரில் வீற்றுஇருக்கும் பட்டி விநாயகர் கோயில் மிகப்பழமையானது. இவருக்அர்ச்சனை செய்து, ஏழைகளுக்அன்னதானம் செய்தால் மற்றவருக்கொடுத்த பணம் விரைவில் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. சென்னை அருகிலுள்ளகாரனோடை (கோல்கட்டா ரோட்டில் 27கி.மீ.) பாலத்தை அடுத்திருக்கும் தலம் பஞ்சேஷ்டி. இங்கிருந்து மேற்கே 2கி.மீ., துõரத்தில் உள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோயில். இங்குள்ள காரியசித்தி கணபதி பீடம் குறுகலாக ஆரம்பித்து, இடையில் அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் தாமரை மொட்டுப் போலவித்தியாசமாக இருக்கிறது. பிள்ளையாருக்குபுதன்கிழமையில் அருகம்புல் சாத்தி வழிபடுவது நல்லது. தொடர்ந்து 9 புதன்கிழமையில் வழிபாட்டை மேற்கொண்டபின், இயன்ற அளவு ஏழைக் குழந்தைகளுக்நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தானம் அளித்தால் ஞாபகசக்தி அதிகரித்து பிள்ளைகள் படிப்பில் சிறந்துவிளங்குவர். பெங்களூரு மல்லேஸ்வரம் 8வது கிராஸில் இருக்கும் விநாயகர் திருமணயோகம் அளிப்பதில் சக்தி மிக்கவராகத் திகழ்கிறார். இவருக்சோமாஸி என்னும் கர்ஜிக்காய் மாலை சாத்தி வழிபட திருமணத்தடை விரைவில் நீங்கும். சித்துõர் அருகிலுள்ள காணிப்பாக்கம் நிஜரூப சுயம்பு விநாயகர் சக்தி மிக்கவராக விளங்குகிறார். வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க இவருக்பூஜை செய்கின்றனர். மும்பை சித்திவிநாயகர் கோயிலில், செவ்வாய்க்கிழமைகளில் பிள்ளையாரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். வேலை தேடுபவர்கள் நல்ல பணி கிடைக்க வேண்டிக் கொள்வர். முதல் மாத சம்பளம் பெற்றதும், சித்திவிநாயகருக்கு விசேஷ பூஜை செய்வர். புனே மார்க்கெட் பகுதியில்உள்ள தகடுஸேட் கணபதி, கோயிலில், பக்தர்கள் பொரி மற்றும் தீர்த்தத்தை தாங்களே எடுத்துக் கொள்ளலாம். இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் லாபத்தில் ஒரு பகுதியை தகடுஸேட் கணபதிக்காணிக்கையாக அளிக்கின்றனர். மும்பை டிட்வாலா மகாகணபதியின் கண்களிலும், நாபியிலும் (தொப்புள்) வைரக் கற்கள் ஜொலிக்கும். உயிரோட்டத்துடன் காட்சி தரும் இவர் நாக பந்த பீடத்தில் அமர்ந்து, தன்னை நாடிவருவோருக்வளம் தருகிறார். ஞானசம்பந்தர் திருமருகல் (நாகப்பட்டினம் மாவட்டம்) என்ற திருத்தலத்தில் விஷம் தீண்டி இறந்தவரை பதிகம் பாடி உயிர்ப்பித்தார். இங்குதெற்வீதியில் கோபுர வாசலுக்குஎதிராக உள்ள விடம் தீர்த்த விநாயகரைவழிபட, விஷக்கடி தொடர்பான நோய் நீங்கும்.