புதுச்சேரி: புட்லாய் அம்மன் கோவிலில், விநாயகருக்கு 25 கிலோ ‘மெகா’ லட்டு படையலிடப்பட்டது. காமராஜர் சாலை ராஜய்யர் தோட்டத்தில் புட்லாய் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோவிலில் உள்ள பால விநாயகருக்கு, 25 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் லட்டு படைக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.