பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
தேனி : தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நாயுடு மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ராதா சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,29ம் தேதி முதல் பூஜைகள் தொடங்கின. ஆக., 30ம் தேதி சனிக்கிழமை யாகசாலை புண்ணியாக வாசனம் மஹாசாந்தி ஹோமம், நித்தியஹோமம், உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.
ஆக., 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணி முதல் 11.45 மணிக்குள் ஸ்ரீஇராதா சமேத கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கும், இதர பரிவார தேவதைகளான விநாயகர், யோகநரசிம்மர், ஆஞ்சநேயர், தட்ஷிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை, கருப்பசாமி, நாகம்மாள், நவக்கிரக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தேனி தென்றல் லயன்ஸ் சங்க பட்டய தலைவர் வீரராஜ் தலைமை வகித்தார்.தொழிலதிபர் முத்துகோவிந்தன் வரவேற்றார். வசந்தம் ஏஜன்சி உரிமையாளர் ராஜா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க தலைவர் முத்துவேல்ராஜன்,தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்க தலைவர் நாராயணசாமிநாயுடு, தொழிலதிபர்கள் சங்கரநாராயணன், ராஜேந்திரன், பாலமுருகன், பழனிசெட்டிபட்டி நாயுடு மகாஜன சங்க செயலாளர் ராமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை மற்றும் ராணிமங்கம்மாள் மகளிரணியினர் செய்திருந்தனர்.