பதிவு செய்த நாள்
04
செப்
2014
10:09
பழநி : பழநிதேவஸ்தான உபகோயிலான, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில், ஆவணி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா துவங்கி செப்., 13 வரை நடக்கிறது. தினமும் வரதராஜபெருமாள் காலை 7 மணிக்கு மேல் சப்பரத்தில் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்குமேல், அனுமார், கருடர் போன்ற வாகனங்களில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்., 9 ல் திருக்கல்யாணமும், செப்.,11 ல் தேரோட்டம் நடக்கிறது.விழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆவணி பிரம்மோற்சவ விழாவையோட்டி கோயிலில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள், பக்திஇன்னிசை, பக்திசொற்பொழி நடக்கிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.
தொடர்புடைய கோயில்கள் :