பதிவு செய்த நாள்
04
செப்
2014
10:09
அரியலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.அரியலூர் பெரிய அரண்மனை தெரு, சக்தி விநாயகர் கோவில் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சக்தி விநாயகர் விசர்ஜன ஊர்வலம், நேற்றுமுன்தினம் மாலை துவங்கியது.அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அரியலூர் பெரிய அரண்மனை தெருவில் துவங்கிய விநாயகர் விசர்ஜன ஊர்வலம், அரியலூர் ஒப்பிலாதம்மன் கோவில் தெரு, மேலஅக்ரஹார தெரு, வெள்ளாழ தெரு, மங்காயி பிள்ளையார் கோவில் தெரு, கைலாசநாதர் கோவில் தெரு, வ.உ.சி. தெரு, கல்லக்குடி தெரு மற்றும் தவுத்தாய்குளம் வழியாக வாரணவாசி மருதையாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், அரியலூர் நாராயணசாமி பிள்ளை
அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் துரை அர்ச்சுணன், ராமமூர்த்தி பிள்ளை, சுப்ரமணியன், மகாராஜன், அசோக்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.