பதிவு செய்த நாள்
04
செப்
2014
10:09
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே உள்ள வளநாட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வளநாடு பஸ்ஸ்டாண்ட் வாடிப்பட்டி, கொடம்பறை ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் அபிஷேக ஆராதனை நடந்தது. வாடிபட்டி மற்றும் கொடம்பறை ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக, வளநாடு பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து சந்தைப்பேட்டை, சிவன் கோவில் தெரு, கடைவீதி, அம்பலக்காரத்தெரு, குறிஞ்சி நகர், செட்டிமேடு, தெற்குகளம் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வளநாடு செங்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதையொட்டி, மணப்பாறை டி.எஸ்.பி., முத்தரசு தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவை முன்னிட்டு, வளநாட்டில் அன்னதானம் நடந்தது.