கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கீழவலசை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 5ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. முன்னதாக மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் கரகம், அக்னிசட்டி, பால்குடம், பூக்காவடி ஆகிய நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்தனர். பெண்கள் பொங்கலிட்டனர். நேற்று மாலையில் முளைப்பாரியை கடலில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.