குழந்தைகள் பிறந்ததும் இவ்வுலகப் பந்தங்களில் பிணைப்பதற்காக, சடம் என்னும் வாயு குழந்தைகளிடம் சேர்ந்து விடுவது இயல்பாகும். சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால், நம்மாழ்வார் தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த சட வாயுவைக் கோபித்து விரட்டினார். தன் உள்ளுணர்வினால் பிறவி பந்தத்திலிருந்து விடுபட்டு ஞானம் பெற்றதால் சடகோபன் என்ற சிறப்புப்பெயர் பெற்றார்.பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே அனுபவித்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு. அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது. சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.