பதிவு செய்த நாள்
05
செப்
2014 
12:09
 
 காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சிறந்து விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம், நேற்று, கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, யாகத்தை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1995ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு, வரும் 2016ல், கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மூன்று ராஜகோபுரம்வடக்கு, தெற்கு, மேற்கு ராஜகோபுரங்கள் சீரமைப்பு, கோவில் குளம் சீரமைப்பு, மண்டபம் சீரமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், பங்காரு காமாட்சி சன்னதி, உற்சவர் சன்னதியும் சீரமைக்கப்பட உள்ளன.இதனை முன்னிட்டு, பாலாலய பூஜை, நேற்று காலை 8:15 மணியளவில் துவங்கியது. வேதங்கள் ஓதப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 11:00 மணியளவில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, யாகத்தை துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், மூன்று ராஜகோபுரம் திருப்பணி வேலைகள் நடக்கும். இறுதியாக, கிழக்கு ராஜகோபுரம் பணி நடக்கும். வரும் 2016 க்குள், இப்பணி முடிந்து, கும்பாபிஷேகம் நடக்கும், என்றார்.முக்கியக் கிழக்கு ராஜகோபுரம் திருப்பணி மட்டும், தற்போது நடக்க வில்லை. மூலவர் சன்ன திக்கும் திருப்பணி நடக்கவில்லை. எனவே, வழக்கம் போல் அம்பாள் சன்னதியில் பூஜை வழிபாடு நடக்கும்.2016ம் ஆண்டுக்குள்திருப்பணிகள், வரும் 2016ம் ஆண்டுக்குள் முடிவடைந்து, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 81வது ஜெயந்தி விழாவையொட்டி, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.