திருப்போரூர் : படூர் பைரவர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. கேளம்பாக்கம் அடுத்த, படூரில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக காலபைரவர், சூரியன், சமயகுரவர்கள் ஆகியோருக்கு, புதிதாக புதிய சன்னிதிகள் கட்டப்பட்டன. இவற்றின் கும்பாபிஷேகம் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கி, 10:30 மணிக்குள் நடந்தது. இக்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேள்விகளும், பூஜைகளும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.