அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புளியம்பட்டி கொண்டலம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இன்று மங்கள இசையுடன், யாகசாலை பூஜைகள், பல்வேறு ஹோமங்கள் நடந்து வருகின்றன. 7 ம் தேதி (ஞாயிற்று கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கொண்டல்ராஜ், செயலர் வரதராஜ், பொருளாளர் தனபாலன் செய்கின்றனர்.