பதிவு செய்த நாள்
05
செப்
2014 
12:09
 
 செஞ்சி : செஞ்சி தாலுகா கொணலூர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 3ம் தேதி மாலை 5 மணிக்கு கரிக்கோல ஊர்வலம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம யாகம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இரவு 9 மணிக்கு சாமி பிரதிஷ்டையும், அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு கோபூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. 9.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 10 மணிக்கு கடம் புறப்பாடும் 10.10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.இத்துடன் இங்குள்ள வரதராஜ பெருமாள், திரவுபதியம்மன், மாரியம்மன், கூத்தாண்டவர் சாமிகளுக்கு ஊரணி பொங்கலும், மகா உற்சவமும் நேற்று நடந்தது. இரவு 9 மணிக்கு கூத்தாண்டவர், வரதராஜர், மாரியம்மன் சுவாமி வீதியுலா நடந்தது.