பதிவு செய்த நாள்
06
செப்
2014
12:09
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம் கான்வென்ட் ரோடு, பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருப்பணிக்குழுத் தலைவர் சிவபெருமாள், கவுரவ ஆலோசகர் பழனிவேல், தலைவர் ஸ்ரீநாத், செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் துரைராஜ், துணைச் செயலாளர் மோகன், துணை பொருளாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் எம். கண்ணன், ஏ. கண்ணன், வள்ளியப்பன், கவுன்சிலர் பாலு, அ.தி.மு.க., இளைஞர் பாசறை சுதாகர் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி: அஞ்சுகுளிப்பட்டி கிராமம் எல்லைப்பட்டியில் அமை ந்துள்ள யோகவிநாயகர்,காளியம்மன், மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம தேவதைகளு க்கு கனி வைத்தும்,தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைத்து வரப்பட்டன.
விநாயகர் வழிபாடும், நிலத்தேவர்வேள்வி வழிபாடும், பிரவேசபலி, மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், கலாகர்சனம் மற்றும் முதற்காலயாக வேள்வியை முன்னிட்டு பஞ்சசுத்தஹோமம், கனி மூலிகை வேள்வி, மஹாபூர்ணாஹூதி, பேரொளி வழிபாடு, மஹாதீபார தனை நடந்தது. கோபூஜை, சுமங்கலி பூஜை,கன்யா பூஜை ஆகியவை செய்து கோயில் கலசங்களின் மேல் புண்ணி தீர்த்தத்தை ஊற்றி, தீபாரதனை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எல்லைப்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.
அம்பாத்துரை: அம்பாத்துரை ஊராட்சி, பெருமாள்கோயில்பட்டியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் தீர்த்தங்கள், முளைப்பாரி அழைத்தல், ஊர் அழைப்புடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மறுநாள் காலை விநாயகர் பூஜை, வேதபாராயணம் நடந்தது.பின் மாரியம்மன், செல்வ விநாயகர்,முனியப்பன் கோயில் கலசங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் பொது பொங்கல் வைக்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவில் முத்தாலம்மன் நாடகம் நடந்தது.
வடமதுரை: பாகாநத்தம் ஊராட்சி மலைப்பட்டி வால்கரடு அருகிலுள்ள மாசிமுனி, பெரியகருப்பு, பெரியசாமி, மகாமுனி, வண்டிகருப்பு, வண்டிமுனி, கரடிகருபுப்பு, தொட்டிச்சியம்மன், பெரியகாண்டியம்மன், சின்னம்மாள், பாப்பாத்தி, காளியம்மன், கன்னிமார், வெள்ளையகிழவன், கோட்டைகட்டி கிழவன், வெள்ளையன், ஆகிய உடனுறை தெய்வங்கள் கொண்ட கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பாலக்குறிச்சி மந்தைநாயக்கர் நாகமுத்து நடத்தி வைத்தார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் திரவியராஜ் முன்னிலை வகித்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.