உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பூரணி பொற்கலை அய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழா மற்றும் சுவாமி குதிரை சவாரி ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி கடந்த மாதம் 5ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. 19ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். மதியம் 3 மணிக்கு அய்யனார் சுவாமி மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலம் புறப்பட்டது. சுவாமி குதிரை சவாரி ஊர்வலம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஏரியிலுள்ள அய்யனார் மண்டபம் அருகே குதிரை சவாரி வலம் வந்தது. அப்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கம்பு உள்ளிட்ட தானிய பயிர்களை அய்யனார் சுவாமி மீதும், குதிரை சவாரி மீதும் வீசி நேர்த்தி கடனை நிவர்த்தி செய்தனர். பின்னர் சுவாமி கோவிலை சென்றடைந்தது.