மகாளயபட்ச விரத நாட்களில், ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம், தர்ப்பணத்திற்கு ஒவ்வொரு விசேஷ பலன் உண்டாவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பிரதமை- தனலாபம், துவிதியை- குழந்தைகள்திருந்துதல் திரிதியை- விருப்பம் நிறைவேறுதல் சதுர்த்தி-எதிரிபயம் நீங்குதல் பஞ்சமி- செல்வ வளம் சஷ்டி- புகழ், சப்தமி- பதவி உயர்வு, அஷ்டமி- கல்வி வளம், நவமி - லட்சுமி யோகம் தரும் பெண் குழந்தைகள் பிறத்தல் தசமி- நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுதல், ஏகாதசி- அறிவாற்றல், துவாதசி- ஆபரண சேர்க்கை, திரயோதசி- சகல சவுபாக்கியம், சதுர்த்தசி-சகல நன்மை கிடைத்தல், அமாவாசை-மேற்சொன்ன எல்லா நற்பலன்களும்ஏற்படுதல். இந்நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பலனை அதிகப்படுத்தும்.