நாகர்கோவில் : சுசந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்திரன் தேரில் மகாவிஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு ரதவீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு ஒன்பது மணிக்கு மகாவிஷ்ணுவுக்கும், அம்பாளுக்கும் பள்ளியறை பூஜை நடைபெற்றது. இன்று தெப்பக்குளத்தில் ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.