தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி, முழு நிலவு ஆன்மிக வலம் துவங்கியது. பெரியகோவில் வழிபாட்டு மன்ற செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆன்மீக வலம் வந்தனர். இனி மாதம்தோறும் பவுர்ணமி நாளில் ஆன்மீக வலம் நடத்தப்படும், என்று தெரிவித்துள்ளனர்.