கோவில் திருப்பணிக்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் தாமதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2014 12:09
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் உள்ள பழமையான முருகன், மாரியம்மன் கோவில்களை புதுப்பிக்க அறநிலையத் துறை அதிகாரிகளின் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தியாகதுருகம் நகரில் சேலம் சென்னை சாலையையொட்டி நுõற்றாண்டு பழமையான முருகன் கோவில் உள்ளது. இங்கு ஒன்றரை அடி உயர முருகன், விநாயகர் சிலைகள் உள்ளன. கோவில் விமானம் முகலாய கட்டட முறைப்படி சுண்ணாம்பு கலவைய õல் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் முனிவர் ஒருவரின் ஜீவ சமாதியும் உள்ளது. இங்குள்ள மலைமீதுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை 1760 ம் ஆண்டில் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழமை மாறாத இக்கோவிலை பராமரித்து அதே நிலையில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கோவில் முன்புறம் கட்டப்பட்டிருந்த மண்டபம் 7 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனை செப்பனிட்டு திருப்பணி செய்ய சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை தலைமையில் முயற்சி எடுத்தனர். கருவறை விமானம் தவிர்த்து இடிந்து விழுந்த மண்டபத்தை விஸ்தரித்து கட்ட பக்தர்களிடம் நிதி கோரினர். கோவிலை ஒட்டி 20 சென்ட் நிலத்தில் புதர் மண்டி கிடப்பதால் சுத்தப்படுத்தி பூச் செடிகள் வளர்க்க திட்டமிடப்பட்டது. இப்பணிக்காக பக்தர்கள் பலர் நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவிலை புதிதாக கட்ட பக்தர்கள் நிதியுதவி வழங்கவும் தயாராக உள்ளனர். இவ்விரு கோவில்களும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் திருப்பணி வேலைகளை அதிகாரிகள் அனுமதிக்கு பிறகே துவக்க முடியும். இதற்காக அதிகாரிகளை உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து திருப்பணியை துவக்க அனுமதி வழங்கவும், அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தும் பதில் இல்லை. கோவில்களை புதுப்பிக்க பணமின்றி திருப்பணிக் குழுவினர் தவித்து வரும் நிலையில், நன்கொடை வழங்க பக்தர்கள் தயாராக இருந்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளது தியாகதுருகம் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.