கல்லல் : கல்லல், சோமசுந்தரம் சவுந்திரநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளம், நகரின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இப்பகுதியினர், இங்கு குளிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, இக்கோயில் தெப்பம் தூர்வாரப்படாமல் கிடந்தது. இதையடுத்து, சமூக ஆர்வலர் ஆறுமுகம், உரிய அனுமதி பெற்று தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, நான்கு நாட்களாக மோட்டார் மூலம், குளத்தில் இருந்த நீர் வெளியேற்றினர். முட்புதர்களை, முருகப்பா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அகற்றி சுத்தம் செய்தனர்.