பதிவு செய்த நாள்
11
செப்
2014
01:09
குறிச்சி : செட்டிபாளையம் கன்னியம்மன் கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.போத்தனுாரை அடுத்த செட்டிபாளையத்திலுள்ள கன்னியம்மன் கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை ௪.௩௦ மணிக்கு, கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, பிம்பசுத்தி, ரக்சாபந்தனம், நாடி சந்தானம், கும்பங்கள் யாகசாலையிலிருந்து மூலாலயத்திற்கு பிரவேசித்தல், கலா சம்யோஜனம் உள்ளிட்டவை நடந்தன. இதையடுத்து, 6.45 மணிக்கு விமான கோபுரங்கள், விநாயகர் முதலிய பரிவாரங்கள், கன்னியம்மன் கருப்புசாமி தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ௧௦.௦௦ மணிக்கு மேல், தசதானம், தசதர்சனம், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், நிவேதனம், தீபாராதனை, உபசார பூஜைகள், மகா தீபாராதனை பிரசாத வினியோகம் மற்றும் அன்னதானம் நடந்தன. இன்று முதல் ௪௮ நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.