பதிவு செய்த நாள்
11
செப்
2014
01:09
ஊத்துக்கோட்டை : புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. ஊத்துக்கோட்டை அடுத்த, புதுக்குப்பம் கிராமத்தில் உள்ளது, அங்காளம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிந்து, நாளை (12ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று, (11ம் தேதி) வியாழக்கிழமை காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும், சுவாமிகளுக்கு கண் திறப்பு, சுமங்கலி பூஜை, மகா பூர்ணாஹூதி நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை (12ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும் கடம் புறப்பாடு, பரிவார தெய்வம், ஸ்ரீப்ராம்மி, துர்க்கை கும்பாபிஷேகம், பின் அங்காளம்மன் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்.