பதிவு செய்த நாள்
12
செப்
2014
02:09
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் உள்ள வெள்ளனுார் அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில், 200 ஆண்டுகளுக்கு முன் அத்தனுார் அம்மன், வெள்ளனுார் அம்மன் கோவில்கள் பொதுமக்களால் கட்டப்பட்டன. சிறியஅளவில் இருந்த இந்த கோவில்களை புதுப்பிப்பதோடு, முன்மண்டபம் மற்றும் பல்வேறு அலங்கார கட்டுமானங்கள் உள்ள கோவிலாக அமைக்க பொதுமக்கள் தீர்மானித்தனர்.இதனைத்தொடர்ந்து, இதற்கான பணிகள் தொடங்கின. பல மாத கட்டுமானப்பணிகளுக்கு பின், இந்தக்கோவில்கள் புதுப்பிக்கப்படடன. கடந்த 5 ம்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. கடந்த 7 ம் தேதி காலை 8.20 மணிக்கு அத்தனுார் அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. வெள்ளனுார் அம்மன் கோவில் கும்பாபிேஷக பணிகள் கடந்த 8 ம்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவில், நேற்று காலை 7.30 மணிக்கு யாத்ராதானம், அம்மன் விமானம், மூலமூர்த்திகள், பரிவார தெய்வங்களுக்கும், காலை 8.20 மணிக்கு வெள்ளனுார் அம்மன் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.