அகத்தியமுனிவரின் சீடம் ரோமசமுனிவர் பூஜித்த ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. பாபநாசம் பாபநாசநாதர் கோயில். சேரன்மகாதேவி, இவ்வூர் அருகிலுள்ள கோடக நல்லூர், திருநெல்வேலியிலுள்ள சங்காணி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தமங்கலம் என்னும் தலங்களிலுள்ள ஒன்பது சிவாலயங்களும் நவ கைலாயங்ளாகும். இத்தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பாகும்.