விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம் கிராமத்தில் மூன்று கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. எசாலம் கிராமத்திலுள்ள விநாயகர், செல்வமுத்து மாரியம்மன், சப்த கன்னிகை ஆகிய கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 10ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன், கோபூஜை, தனபூஜை, நவக்கிரகஹோமம், லட்சுமி குபேர பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கலச புறப்பாடு நடந்து, மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. எசாலம் சிவகுருநாத சர்மா விநாயகர், செல்வ முத்துமாரியம்மன், கன்னியம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினார். விழா ஏற்பாடுகளை எசாலம் ஒன்றிய கவுன்சிலர் கலைமதி பன்னீர் தலைமையில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.