குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன் உண்டாகும். இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். மும்முகம் ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி உண்டாகும். நான்கு முகம் ஏற்றினால் பசு, பால், பூமி சேர்க்கை உண்டாகும். ஐந்து முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லட்சுமி கடாட்சம் ஆகியவை பெருகும்.