பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், கடந்த, 30 நாட்களில் பக்தர்கள், 44.43 லட்சம் ரூபாய் ரொக்கம், 437 கிராம் தங்கம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இவர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக்கோவிலில் உள்ள உண்டியலில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.அந்த வகையில், கடந்த, 30 நாட்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை, நேற்று முன்தினம் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியலில் திறக்கப்பட்டது.இதில், 150க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், ரொக்கம், நகை மற்றும் வெள்ளி ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணினர். இதில், 44.43 லட்சம் ரூபாய்; 437 கிராம் தங்கம்; 3,050 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.