பதிவு செய்த நாள்
15
செப்
2014
12:09
திருத்தணி : எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். திருத்தணி நகராட்சி, 20வது வார்டு அண்ணாநகரில் (குண்டலுார்), உள்ள எல்லையம்மன் கோவிலை, பகுதிவாசிகள் புதுப்பித்து, கடந்த ௧௨ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினர்.விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.