கீழக்கரை : கீழக்கரை அருகே புல்லந்தை கிராம தச்சர்ஊரணி வடகரையில் உள்ள மருதார் உடையார் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்., 13 காப்புகட்டுதலுடன் முதல்கால யாகசாலைபூஜை தொடங்கியது. அனுக்ஞை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, சூரியநமஸ்காரம் முதலியவற்றுடன் கடம் புறப்பாடாகியது. நேற்று காலை 10 மணிக்கு பரமக்குடி ஜெயமுரளி குருக்கள், சிவாகுருக்கள் ஆகியோர் புனித நீரை கும்பத்தில் ஊற்றினர். பின்னர் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அய்யனார் அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை புல்லந்தை மருதார்உடையார் கோயில் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர். முதுகுளத்தூர்: குமாரகுறிச்சியில் ஸ்ரீவடக்கூரான் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கோமாதா உட்பட ஆறு கால யாக கால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. ஊராட்சி தலைவர் வேலம்மாள், கிராம தலைவர் செல்லையா, குமாரகுறிச்சி காலனி கிராம தலைவர் விஜயநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சுற்றுப்புற கிராமமக்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.