பதிவு செய்த நாள்
15
செப்
2014
12:09
பாபநாசம்: பாபநாசம், பி.டி.ஒ. காலனியில் அமைந்துள்ள பாலசுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, விநாயகர் வேள்வி, திருவிளக்கு வழிபாடு, புனித நல்வழிபாடு நடந்தது. இரண்டாவது நாள் மாலையில், நிலதேவர் வழிபாடு, மண் எடுத்தல், காய்பணிதல், வினை தீர்க்கும் விநாயகருக்கு முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாவது நாள் காலையில் திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், வேள்வி நிறைவு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த, 7ம் தேதி காலையில் திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், கடகங்கள் வேள்வி சாலையிலிருந்து புறப்பாடும், விமானம் திருக்குட நன்னீராட்டு, மூலவருக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. நன்னீராட்டு விழாவில், குடந்தை ஜோதிமலை இறைபணி மன்ற நிறுவனர் திருவருள் திருவடிகுடில் சுவாமி, தீர்த்தமலை மடாதிபதி வைத்திலிங்க சுவாமி, பாபநாசம் மாஜிஸ்திரேட் நாகராஜன், முன்னாள் மாஜிஸ்திரேட் பாலசுந்தரம், சிறைத்துறை கண்காணிப்பாளர் உமாபதி, விழா கமிட்டி நிர்வாகி சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாலையில், புதிதாக செய்யப்பட்ட மூஞ்சுறு வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும், இரவு உலக நலனுக்காக குத்துவிளக்கு பூஜையும் நடந்தது.