சங்கராபுரம்: சோழம்பட்டு கிராமத்தில் விநாயகர், காமாட்சி அம்மன், ஐயனாரப்பன், கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜை, கோ பூஜை நடந்தது. விநாயகர், ஐயனாரப்பன், கெங்கையம்மன், காமாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தை செம்பராம்பட்டு வெங்கட்ராமய்யர் நடத்தி வைத்தார். ஊராட்சி தலைவர் சித்ரா வெங்கடேசன் அன்னதானம் வழங்கினார்.