பதிவு செய்த நாள்
18
செப்
2014
01:09
சென்னை : சென்னையில் இருந்து, நுõற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், வரும் 25ம் தேதி, திருப்பதிக்கு பாதயாத்திரை யாக புறப்படுகின்றனர். "திருப்பதி திருமலை பாதயாத்திரீக சேவா சங்கம் சார்பில் 9ம் ஆண்டாக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்ல உள்ளனர். கடந்த, 10ம் தேதி மாலையணிந்த பக்தர்கள், வரும், 25ம் தேதி, பெரியார் நகர் சிவா விஷ்ணு ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்படுகின்றனர். இரட்டைஏரி, செங்குன்றம், காரனோடை, பெரியபாளையம், சுருட்டப்பள்ளி, நாகலாபுரம் வழியாக பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை ஆக செல்கின்றனர்.