பதிவு செய்த நாள்
18
செப்
2014
02:09
காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில், புரட்டாசி மாத பிறப்பு சிறப்பு பூஜை நடந்தது. காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
* காரிமங்கலம் யூனியன் பிக்கனஅள்ளி மலை மீது அமைந்துள்ள தேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று காலை, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
* கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவிலில், ஸ்வாமிக்கு, நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
* தர்மபுரி, கோட்டை பரவாசுதேவர் கோவிலில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்வாமிக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
* தர்மபுரி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், மணியாம்பாடி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெருவில் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், கெரகோடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு ரோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
* எஸ்.வி.,ரோடு ஆஞ்சநேயர் கோவில், தாச ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உட்பட அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிகவசம் சாத்துபடி மற்றும் பூஜைகளும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை தரிசனம் செய்தனர். அனைவருக் கும் பிரசாதம் வழங்கப்பட்டது.