பதிவு செய்த நாள்
22
செப்
2014
12:09
கும்பகோணம்: சூரியனார்கோவிலில் உள்ள சிவசூரியபெருமானுக்கு, நேற்று, மகாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இங்கு சூரியன் மூலவராகவும், சூரியனை பார்த்தவாறு குருபகவானும், ஏனைய கிரகங்கள் தனித்தனி சன்னதிகளாக சூரிய பகவானை சுற்றி எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை, 10 மணிக்கு மூலவர் சூரியபகவான் சன்னதி எதிரில், சிறப்பு ஹோமம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார். உற்சவர் உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்குசிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து, கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கட அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு புஷ்பலங்காரம் ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். மகாபிஷேக ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்தனர்.