பதிவு செய்த நாள்
22
செப்
2014
12:09
மத்துார் : மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், வரும், 25ம் தேதி முதல், நவராத்திரி விழா துவங்கி, அக்., 4ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் இவ்விழாவில், தினமும் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் பக்தி கச்சேரி போன்றவை நடக்கிறது.மேலும், கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து, உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ஊர்வலம் நடைபெறும்.மேலும், குத்து விளக்கு பூஜை, தினசரி உற்சவர் அம்மனுக்கு ஒரு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டிற்கான நவராத்திரி விழா, வரும், 25ம் தேதி துவங்குகிறது. இவ்விழா, வரும், அக்., 4ம் தேதி வரை நடைபெறும், விழாவை ஒட்டி தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வர்.