கடலூர்: புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது. வரும் அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெற உள்ள 10 நாள் உற்சவத்தில் தினமும் இரவு 7:00 மணிக்கு ராஜகோபால சுவாமி சமேத செங்கமலத் தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவில் புறப் பாடும், 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தீபாராதனையும் நடக்கிறது. 10ம் நாள் உற்சவமான விஜயதசமியன்று அம்பு உற்சவமும், ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளிக்கிறார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார் செய்து வருகின்றனர்.