பதிவு செய்த நாள்
25
செப்
2014
11:09
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில், 52ம் ஆண்டு விடையாற்றி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், திரவியம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை வெள்ளிகவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, சுண்டல் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை வாணியச் செட்டியார் மற்றும் இசை மாலை இளைஞர் அணியினர் செய்தனர்.