பதிவு செய்த நாள்
25
செப்
2014
11:09
ஈரோடு: கோவில்களில், நவராத்திரி விழா துவங்கியுள்ளது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி விழா, இன்று துவங்கி, ஒன்பது நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, ஈரோடு, கருங்கல்பாளையம் ஓம்காளி அம்மன் கோவிலில், ஒன்பது நாட்களுக்கும், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.நேற்று தேவி கருமாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, திருக்கடையூர் அபிராமி, 26ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், இரவு, ஏழு மணிக்கு திருமங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்குதலும், 27ம் தேதி அனந்த சயனமும், 28ம் தேதி மீனாட்சி, 29ம் தேதி கமலம்பிகை, 30ம் தேதி கனகதுர்க்கை அலங்காரமும் செய்யப்படுகிறது. அதுபோல், ஒன்றாம் தேதி அர்த்தநாரீஸ்வரர், இரண்டாம் ÷ ததி சரஸ்வதி, மூன்றாம் தேதி மகிஷாசூர மர்த்தினி, நான்காம் தேதி பொன்னுஞ்சல் அலங்காரமும் செய்யப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு கோவில் முன்புறம், கொலு வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பூசாரி பாலகிருஷ்ணன் தலைமையில், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்