டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நாளை முதல் சமஸ்கிருத மாநாடு கவர்னர் மாளிகையி்ல் நடைபெற உள்ளது. மாநாட்டில் உலகின்பல்வேறு பகுதிகளில் இருந்து அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். பழமைவாய்ந்த சமஸ்கிருத மொழியை புத்துயிர் ஊட்டுவது மற்றும் மொழியை கம்ப்யூட்டர் மயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநிலத்தின் சமஸ்கிருத பல்கலை கழகம் செய்துள்ளது. மாநாட்டு பணிகளை கவர்னர் ஆஷிஸ் குரேஷி கவனித்து வருகிறார்.