பதிவு செய்த நாள்
25
செப்
2014
12:09
மேலுார் : திருவாதவூர் வேதநாயகி அம்பாள்,திருமறை நாதர் கோயிலில் நவராத்திரி கலைவிழா இன்று(செப்.,25) முதல் அக்.,3 வரை நடக்கிறது. செப்.,25ல் ராஜராஜேஸ்வரி, 26ல் வேதநாயகி அம்மன், 27ல் தட்சிணாமூர்த்தி, 28ல் மீனாட்சி அம்மன், 29ல் திருவாதவூரானும் திருவாதவூரும், 30ல் விநாயகர் ஜனனம், அக்.,1ல் மகிஷாசுரமர்த்தினி, 2ல் சிவபூஜை, 3ல் சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது. தினமும் மாலை சொற்பொழிவு நடக்கிறது. அக்.,3 மாலை 5 மணிக்கு மாணிக்க வாசகர் புறப்பாடு மற்றும் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.