கீழக்கரை : ஏர்வாடியில் மகான் அல்-குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது வலியுல்லாஹ் (ரலி) பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு விழா கடந்த செப்.,18 அன்று நடந்தது. நேற்று மாலை 5 மணியளவில் யாஷஹீது, முராது ஹாஸில் என்ற கோஷம் முழங்க கொடிக்கம்பத்தில் இருந்து ஷரீப் ஓதி தமாம் செய்து கொடியிறக்கம் செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஹக்தார் நிர்வாக சபைத்தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாரூக் ஆலீம் அரூஸி, உதவித்தலைவர் செய்யது சிராஜுதீன் மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் உறுப்பினர்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் நெய்சோறு வழங்கப்பட்டது.