ஸ்ரீரங்கம், சமயபுரத்தில் நவராத்திரி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2014 12:09
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் நேற்று நவராத்திரி விழா வெகு விமர்சியாக துவங்கியது. பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், நேற்று காலை 1.15 மணி முதல் 3.30 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. இதை தொடர்ந்து கொலு மண்டப்பத்தில் நவராத்திரி விழா துவங்கியது. கோவிலில் நாச்சியார் சன்னதியில் வரும் 1 ம் தேதி திருவடி சேவை நடக்கிறது.
* நவராத்திரி விழாவையொட்டி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று முதல் மூலவர் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நேற்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், நவராத்திரி விழா துவங்கியது. மேலும், திருவானைக்காவல் அம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன், கமலவல்லி நாச்சியார் கோவில்களிலும் நவராத்திரி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர்.