கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வைத்து, பூஜைகள் நடத்தினர். பழவகைகளை கொண்டு கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி வேலு, விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.