பூவராக சுவாமி கோவிலில் பாத யாத்திரை பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2014 02:09
ஸ்ரீமுஷ்ணம்: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு நடை பயணம் வந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது. இதில் கலந்துக்கொள்ள விருத்தாசலத்தில் இருந்து வைஷ்ணவ மகா சபையினர் பாத யாத்திரையாக ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களுக்கு கோவில் வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சீனுவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் வைஷ்ணவ மகா சபை செயலர் முரளி, நம்மாழ்வார் கைங்கர்ய சபை தலைவர் சுப்ரமணியன், சித்திவிநாயகர் நற்பணி மன்ற தலைவர் வெங்கடேசன், வேங்கடவேணு, அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.