கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை சர்ச்சில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும், தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடக்கும். திருவிழாவின் துவக்கமாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை ஒட்டி, சர்ச்சில் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. சிறப்பு கூட்டுபாடற்பலி, மறையுரை நடந்தது.திருவிழாவை ஒட்டி , தினசரி சிறப்பு ஆராதனை மற்றும் கூட்டு பாடற் பலி பூஜைகள், மறையுரைகள் நடக்கின்றன. வரும் அக்., 3ம்தேதி கோவை மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு பாடற் பலி பூஜையும் நடக்கிறது. 4ம்தேதி மாலை சிறு தேர் பவனியும், அக்., 5ம்தேதி இரவு 7.30 மணிக்கு மாதா தேர் பவனியும் நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை தலைமையில், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.