பெரியகுளம்: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், முரளீதரசுவாமிஜி அருளாசியுடன் பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மையத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து 15 மணி நேரம் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம் நடந்தது. கிருஷ்ணருக்கு பூக்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடந்தது. மஹாரண்யம் கல்யாணஸ்ரீனிவாச பெருமாள் கோயிலிருந்து வந்த பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.