பதிவு செய்த நாள்
04
அக்
2014
11:10
திருப்பதி: கடந்த எட்டு நாட்களாக நடந்து வந்த, பிரம்மோற்சவ வாகன சேவைகள் நேற்று இரவுடன் நிறைவு பெற்றன. இன்று காலை, திருக்குளத்தில் தீர்த்தவாரியிடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெருகிறது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, தீர்த்த வாரிக்காக, திருக்குளத்திற்கு வந்தார்.
அங்கு, சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அச்சமயத்தில், அங்கு கூடியிருந்த பக்தர்களும், புனித நீராடினர். இரவு தங்கப் பல்லக்கில், மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில், பக்தர்கள் புடைசூழ வலம் வருகிறார். பிரம்மோற்சவம் முடிந்ததன் அடையாளமாக இரவு, கொடி இறக்கம் நடைபெருகிறது.