உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேர்த்திருவிழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 24ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 24ம் தேதி மாலை 6 மணிக்கு செல்வர் மேனாவில் புறப்பாடு அங்குரார்பணம் நடந்தது. தினம் பல்வேறு வாகனங்களில் சிறப்பு வீதியுலா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு பெருமாள் சுவாமி சிறப்பு அலங் காரம் செய்து ரதோற்சவம் நடந்தது. கோயில் இருந்து தேர் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நுõற்றுக்கணக்கானோர் தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பின்னர் 11 மணிக்கு பத்தி உலாத்துதல் திருமஞ்சனம், மதியம் 1 மணிக்கு ததியாராதனம் நடந்தது. நாளை 5ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.